முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் அரை இறுதிக்கு தகுதி: இந்திய ஆண்கள், பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 2 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள், பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராட்டத்தக்கது...

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது., பி.வி.சிந்து தகுதியான பதக்கத்தை வென்றுள்ளது மட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளின் வரலாற்று முயற்சிகளையும் பார்த்தோம். இது பாராட்டத்தக்கதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனுராக் தாக்கூர்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்நிலையில், இரு அணிகளும் தங்கப் பதக்கம் வெல்ல 135 கோடி இந்தியர்கள் சார்பாக வாழ்த்துவதாகவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். அரையிறுதிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் நிச்சயம் தகுதி பெறும் என உறுதிபட நம்பியதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய கவுரவம்... 

இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய கவுரவம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத்துறையை கவனித்து வந்த கிரண் ரிஜிஜு, கடந்த மாதம்தான் சட்டத்துறைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து