முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிக்கு ரவிக்குமார் தகுதி: மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி !

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: அரையிறுதியில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. அது வெள்ளியாகவோ அல்லது தங்கமாகவோ இருக்கலாம்.

இறுதிக்கு தகுதி...

32-வது  ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

கசகஸ்தான் வீரர்... 

அரையிறுதியில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா முன்னேறினார்.  இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 

4-வது பதக்கம்...

ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும், மகளிருக்கான குத்துச்சண்டையில்  லாவ்லினா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார் ரவிக்குமார் தாஹியா.

காலிறுதி...

முன்னதாக ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று நடந்த காலிறுதி போட்டியில் ரவிக்குமார் தஹியா 14 – 4 என்ற கணக்கில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை வீழ்த்தினார்.

தீபக் புனியா...

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று நடந்த காலிறுதி போட்டியில் தீபக் புனியா 6– 3 என்ற கணக்கில் சீன வீரர் லின் சூசனை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து