முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி பேட்டிங் குறித்து ' சுனில் கவாஸ்கர் ' கடும் தாக்கு

திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லார்ட்ஸ்: விராட் கோலி பேட்டிங் குறித்து சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

8,000 ரன்கள்... 

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துக்கு அவர் தொடர்ச்சியாக ஆட்டமிழப்பது பற்றி சுனில் கவாஸ்கர் கூறும்போது, “அவருக்கு இப்படியாடுவது நிறைய ரன்களை அவருக்கு கொடுத்துள்ளது. பேக் அண்ட் அக்ராஸ் நகர்வில் அவர் 8,000 ரன்கள் பக்கம் எடுத்திருப்பார்.

ஆடுவதில்லை...

ஆனால் இப்போது மிகவும் வெளியே செல்லும் பந்துகளை ஆடுகிறார். அதுவும் கிரீசுக்கு வந்தவுடனேயே ஆடுகிறார். இப்போது கால் எங்கேயோ இருக்கு, பேட் எங்கேயோ இருக்கு. அதாவது அவர் நன்றாக ஆடுவதில்லை என்பதற்கு இவை சாட்சி. இது அடிக்கடி அவர் கூறும் வார்த்தை ‘தீவிர நோக்கம்’ (இண்டெண்ட்) என்பதாகும். 

முறைதான் வேறு...

ஆனால் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் எல்லா பேட்ஸ்மென்களும் ஸ்கோர் செய்யத்தான் ஆடுகின்றனர், இதில் என்ன பெரிய இன்ண்டெண்ட் வேண்டிக்கிடக்கிறது. அனைவரும் ரன் எடுக்கவே விரும்புவர், ஆனால் முறைதான் வேறு.

அவரது பிரச்னை...

எதிரணியிடம் தாக்குதல் ஆட்டத்தை எடுத்து செல்வது என்று அடிக்கடி கோலி கூறுவது இதற்காகத்தான் என்றால் இதுதான் அவரது பிரச்னை. இது டெஸ்ட் மேட்ச். ஒவ்வொரு பேட்ஸ்மெனுக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும்.

அடித்து ஆட...

பழைய பாணியில் மிட் ஆன், மிட் ஆஃப் என்ற ‘வி’-யில் ஆட வேண்டும். இதில் போராடி வென்று பிறகு அடித்து ஆட வேண்டும், எடுத்த எடுப்பிலேயே விராட் கோலி சொல்வது போலோ அல்லது அவரைப்போலவோ ஆடுவது தவறு, அது பயனளிக்காது” என்றார் சுனில் கவாஸ்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து