முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது முறையாக கனடா நாட்டின் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஒட்டாவா : கனடாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெல்லவில்லை. 

கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019-ல் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி கனடாவில் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் கனடா நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள போதும், பெரும்பான்மையை அடைவதற்காக இடைத்தேர்தலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அங்கு செப்டம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல் களமிறங்கினர். கனடா பொதுதேர்தல் முடிந்த நிலையில், உடனே முடிவுகள் வெளியாகின.

தனிபெருபான்மைக்கு மொத்தம் 170 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 156 இடங்களில் வென்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. எனினும் இந்த முறையும் அந்த கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.  கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால் சிறுபான்மை அரசின் பிரதமராகவே அடுத்த 4 ஆண்டுகள் ஜஸ்டின் ட்ரூடோ தொடரப்போகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து