முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இராமே ஆண்டாலும் - விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அரசியல்வாதி ஒருவரின் போலி கவுரவத்துக்கு பலிகடாவாகும் ஒரு விவசாயும் அவரது இரண்டு மாடுகளும் பற்றிய கதையே இந்த இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் படம்.

ஒரு ஏழை விவசாயி தனது காணமல் போன மாட்டைத் தேடப்போக அது அரசியல் பிரச்சனையாக உருவெடுத்து தேசிய பிரச்சனையாக மாறி கடைசியில் என்னவானது என்பதே திரைக்கதை. நாயகனாக மிதுன் மாணிக்கம், நண்பராக வரும் வடிவேலு  நாயகியாக ரம்யா பாண்டியன், ரிப்போர்ட்டராக வரும் வாணி போஜன், ஒரு பாட்டி இவர்களைச் சுற்றியே முழு படமும் நகர்கிறது. முழுக்க முழுக்க எதார்த்த காட்சிகளிலும் வசனத்திலும் பின்னியிருக்கிறார் இயக்குனர் அரிசில் மூர்த்தி.

பல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து உண்மையைச்சொல்லி இருக்கிறார் இயக்குனர். சீமானின் உச்ச காட்சியைத் தவிர்த்திருக்கலாம். ஆங்காங்கே சில குறைகள் தெரிந்தாலும் ஒரு அற்புத படைப்பு என்றே இப்படத்தை சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு நல்ல எதார்த்தமான படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சூரியாவுக்கு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து