முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3,518 பேரின் கொலைக்கு உடந்தை: ஹிட்லரின் நாஜி படையை சேர்ந்த 101 வயது காவலர் மீது விசாரணை

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

இரண்டாம் உலகப்போர் முடிந்த 76 ஆண்டுகளுக்குப் பிறகு நாஜி வதை முகாம் ஒன்றின் காவலராக இருந்த ஒருவர் 3,518 பேரை கொலை செய்ய உதவியதற்காக விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே உள்ள இரண்டாம் உலகப் போரின்போது சாக்சென்ஹாசன் வதை முகாமில் 2 லட்சத்துக்கும் மேலானவர்களை அடைத்து வைத்திருந்தனர். சாக்சென்ஹாசன் வதை முகாமில் இவர் பணியாற்றியுள்ளார். சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த கைதிகளை சுட்டுக் கொல்லவும் பிறரை சைக்லான் - பி (Zyklon B) நச்சுக் காற்றை செலுத்திக் கொல்லவும் ஜோசஃப் எஸ் எனும் அந்த நபர் உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நாஜி கால குற்றத்துக்காக விசாரணையை எதிர்கொள்ளும் மிகவும் வயதான நபர் இவராவார்.

10 ஆண்டுகளுக்கு முன் ஜான் டெம்ஜன்ஜாக் எனும் வதை முகாம் காவலர் மீது குற்றம் நிரூபணம் செய்யப்பட்டது கடைநிலையில் இருந்தவர்கள், இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்கள் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக விசாரணைக்கு உள்படுத்தப்படுவதற்கு முன்னுதாரணமாக இருந்தது. அதுவரை குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் மட்டுமல்லாது, நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்களே தண்டிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

 

தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக தற்போது குற்றம்சாட்டப்படுபவரின் முழு வெளியிடப்படாமல் ஜோசஃப் எஸ் என்று மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இவர் ஒரு பூட்டு செய்யும் தொழிலாளி என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இவர் இன்னும் இந்த விசாரணை குறித்து பொது வெளியில் பேசவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து