முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்விகள் பற்றி கவலையில்லை: சொல்கிறார் ஸ்டீபன் பிளெமிங்

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

தோல்விகள் பற்றி கவலையில்லை என்று சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

பிளே ஆஃப் சுற்றுக்கு... 

சி.எஸ்.கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஹோதாவில் மூன்று தோல்விகளைச் சந்தித்து உத்வேகத்தை இழந்துள்ளது, இது பிளே ஆஃப் சுற்றில் நிச்சயம் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். வெற்றி என்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும் என்பதே விளையாட்டின் தாரக மந்திரம், ஆனால் சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெனிங் கவலையில்லை என்கிறார்.

ஏமாற்றமளித்தார்...

கே.எல்.ராகுல் போட்டு புரட்டிப் புரட்டி எடுத்தார், 233% ஸ்டரைக் ரேட், 42 பந்தில் 98 ரன்கள் விளாசினார், 7 பவுண்டரி 8 சிக்சர்கள், சி.எஸ்.கே பந்து வீச்சு நாலாப்புறமும் சிதறடிக்கபட்டது. பிளெமிங் கூறுவது என்ன?- “நான் தோல்விகளைக் கண்டு அதிகமாகக் கவலைப்படவில்லை, இவை வெகு விரைவில் மாறும். போகிற போக்கில் ஓரிரு தோல்விகள் ஏற்படுவது சகஜமே. ரவி பிஷ்னாய் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறி தோனி மீண்டும் ஏமாற்றமளித்தார்.

வழிமுறைகள்...

என் அனுபவத்தில் நான் அப்படித்தான் பார்க்கிறேன். கொஞ்சம் சுதந்திரமாக மாற்றம் செய்வதற்கான வழியாகவே இதனை கருதுகிறேன்- பிளெமிங்  3 போட்டிகளை தோற்றால் ஒருவர் கவலையடைய வேண்டும். முதலில் பேட்டிங் செய்து இலக்கை நிர்ணயிப்பது, இத்தகைய பிட்ச்களில் எந்த ஸ்கோர் வெற்றி ஸ்கோராக இருக்கும் என்பதைக் கணிப்பது கடினம். எங்கள் பேட்டிங்கில் ஒரு சரளமான தன்மை இல்லை. பவுலிங்கை எதிர்த்து ரன்களை விரைவில் எடுப்பதற்கான வழிமுறைகள் இல்லை. பிட்ச் ஸ்லோவாக இருக்கிறது, அதில் ஸ்கோர் செய்வதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும்.

கடினமானது...

 

எப்போது ஸ்கோரிங் உயர்ந்தாலும் விக்கெட் விழுந்து விடுகிறது, முதலில் பேட் செய்யும் போது சரியாக ஆடவில்லை. ஒரு மாதிரி மந்தமான அணுகுமுறையினால் குறைவான ஸ்கோரில் முடிந்தோம். நாங்கள் பேட்டிங்கில் கொஞ்சம் சோடை போகிறோம், ஆனால் அணியின் பேலன்ஸ் சரியாக உள்ளது. 6 பவுலர்களை வைத்திருக்கிறோம் இந்தத் தொடர் மிகவும் கடினமானது, வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு ரிதம் தேவைப்படுகிறது. கடந்த 2 போட்டிகளில் துபாய் பிட்ச் உடன் ஒன்றி எங்களால் சரியாக ஆட முடியவில்லை” என்கிறார் ஸ்டீபன் பிளெமிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து