முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிஜிட்டல் முறை பண பரிமாற்றத்தில் தினசரி வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : டிஜிட்டல் முறை பண பரிமாற்றத்தில் தினசரி வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. 

வங்கிகளில் ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்கள் ஆர்.டி. ஜி.எஸ்., ஐ.எம்.பி.எஸ். மற்றும் நெப்ட் ஆகிய 3 முறைகளில் பணப்பரிமாற்றம் செய்து வருகிறார்கள். இதில் வாடிக்கையாளர்கள் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு டிஜிட்டல் முறையில் பணம் அனுப்ப ஐ.எம்.பி.எஸ். எனப்படும் ‘இம்மீடியட் பேமண்ட் சர்வீஸ்’ என்ற முறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் ஒரு வாடிக்கையாளர் மற்றொரு வாடிக்கையாளருக்கு பணம் அனுப்பும் போது பணத்தை பெற்றுக்கொள்ள காத்திருக்க தேவையில்லை. அந்த தொகை உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த சேவையின் மூலம் 24 மணி நேரமும் பணத்தை உடனடியாக அனுப்ப முடியும். விடுமுறை நாட்களிலும் கூட பணம் அனுப்பலாம். ஐ.எம்.பி.எஸ். சேவையை மொபைல் பேங்கிங் செயலி, நெட் பேங்கிங், வங்கி கிளைகள், ஏ.டி.எம். மையம் ஆகியவற்றின் வாயிலாக பெற முடியும்.

இந்த சேவையில் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் அனுப்ப முடியும் என்ற வரம்பு இருந்தது. இது வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் பண கொள்கை தொடர்பான கூட்டம் மும்பையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மேலும் ஐ.எம்.பி.எஸ். முறையில் பணம் அனுப்புவதற்கான தினசரி வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இனி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் ஐ.எம்.பி.எஸ். மூலம் தினமும் ரூ. 5 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து