முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      தமிழகம்
Mettur-Dam-2022-05-19

Source: provided

சேலம் : மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் நேற்று காலை 113.53 அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 4,190 கனஅடியாக இருந்த நீா்வரத்து, நேற்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு  3,672 கனஅடியாகக் குறைந்தது.

இதையடுத்து அணையின் நீா்மட்டம் நேற்று காலை 113.53 அடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 அடியிலிருந்து வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 83.52 டி.எம்.சியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து