முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோமோஸ் சாப்பிடுபவர்களா நீங்கள்? எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை

புதன்கிழமை, 15 ஜூன் 2022      இந்தியா
Ames-Hospital 2022-06-15

மோமோஸ் சாப்பிடுபவர்களா நீங்கள்? பார்த்து கவனமாக விழங்கும்படி எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய இறக்குமதி உணவுகளை ட்ரெண்டில் பின்னுக்குத் தள்ளிவிட்டு இளைஞர்களை ஈர்த்த உணவாக உள்ளது ஆசிய இறக்குமதியான மோமோஸ். அதன் ருசியும், அதற்கு தொட்டுக்கொள்ளத் தரப்படும் மோமோஸ் சட்னியும் இந்திய நாக்குகளை அதற்கு வெகுவாக அடிமையாக்கி வைத்திருக்கிறது.

அண்மையில் மோமோ சாப்பிட்டு அது தொண்டையில் அடைத்துக் கொண்டதால் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தது மோமோஸ் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கை ஃபரன்சிக் இமேஜிங் (Forensic Imaging) என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

அந்த எச்சரிக்கை குறிப்பில், அண்மையில் 50 வயது நபர் ஒருவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். அவரது உடற்கூறாய்வின்போது அவரது மூச்சுக்குழாயில் ஒரு முழு மோமோஸ் சிக்கியிருந்தது. அதனால் மூச்சுத்திணறி அந்த நபர் உயிரிழந்தார் என மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். வாயில் வைத்தவுடன் வழுக்கிச் செல்லும் மோமோஸின் தன்மையும், அதன் சிறிய அளவுமே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக் காரணம். அதனால் மோமோஸ் சாப்பிடும்போது அதை நன்றாக மென்று உண்ண வேண்டும். இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து