முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைக்கும் விவகாரம்: டெல்லியில் 2 நாள் மாநாட்டை மத்திய உள்துறை நடத்துகிறது

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2022      இந்தியா
Central-Interior 2022-11-13

Source: provided

புதுடெல்லி : பயங்கரவாதத்திற்கு பணம் கிடைக்கக்கூடாது என்ற கருப்பொருளில் 3-வது அமைச்சர்களின் மாநாட்டை வரும் 18 மற்றும் 19-ம்  தேதிகளில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறது. 

இந்த மாநாட்டை நடத்துவது சர்வதேச பயங்கரவாதத்திற்கு மோடி அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தையும், இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையையும் பிரதிபலிக்கிறது என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சர்வதேச பயங்கரவாத பிரச்சினை குறித்து மத்திய அரசின் முன்னெடுப்புகளின் முக்கியத்துவத்தையும், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கைகள் பற்றியும், சர்வதேச அரங்கில் பேச்சு வார்த்தைகளை நடத்துவதுமே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 

இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதற்கு எதிராக தொழில்நுட்பம்‌, சட்டம், ஒழுங்குமுறை மற்றும் அனைத்து ஒத்துழைப்பு அம்சங்கள் பற்றியும் விவாதிக்கபடும். இந்த மாநாட்டில் 75 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து