முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த தயாராகும் சந்திரபாபு நாயுடு மருமகள்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      இந்தியா
Lokesh-Brahmani 2023-10-02

Source: provided

திருப்பதி : ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சாலை பணிகளில் ஊழல் நடந்ததாக அவரது மகன் லோகேஷ் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இன்னும் சில மாதங்களில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முக்கியமான காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடு பொது வாழ்வில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 

இதனால் கட்சியை வழிநடத்த அடுத்த கட்ட முயற்சிகளை தீவிரப்படுத்தும் வகையில் என்.டி.ஆரின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான புவனேஸ்வரி மற்றும் அவரது மருமகள் பிராமணி ஆகியோர் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளனர். முக்கியமாக தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த போகும் முக்கியமான பொறுப்பு பிராமணி வசம் சென்றுள்ளது.

புவனேஸ்வரி மற்றும் பிராமணி இருவரும் தீவிர அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஆந்திர மாநிலத்தில் நடந்து வரும் போராட்டங்களில் பிராமணி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 

சந்திரபாபு நாயுடுவின் மருமகள் பிராமணி என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணனின் மகள் ஆவார். என்.டி.ஆர்.பேத்தி என்பதால் ஆந்திர மாநிலத்தில் பொதுமக்களிடையே கூடுதல் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து