முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை புத்தகக் கண்காட்சி: இன்று துவக்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      தமிழகம்
CM-3-2024-12-26

சென்னை, வரும் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். 

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். 1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இன்று நடைபெறும் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியில் கல்லூரியில் இன்று தொடங்கும் புத்தக கண்காட்சி ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 900 அரங்குகள் இடம்பெறும். வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணிவரையும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அனைத்து அரங்கிலும் 10 சதவீத சலுகை விலையில் அனைத்து புத்தகங்களும் விற்பனை செய்யப்படும். சென்னை புத்தகக் கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருது ஆகியவை வழங்கப்பட உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து