முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      தமிழகம்
saree-2024-12-26

சென்னை, பொங்கல் பண்டிக்கைக்கு வழங்க வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு  ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 2025-ம் ஆண்டிற்காக 1 கோடியே77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளும், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இலவச, வேட்டி சேலைகளை ஜனவரி.10-ந்தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தி உள்ளது.2.50 லட்சம் நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2025 பொங்கல் பண்டிகைக்கு 1.75 கோடி சேலைகளும், ஏறத்தாழ 1.77 கோடி வேஷ்டிகளும் வழங்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து