முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

41 தொழிலாளர்களை எலி வளை சுரங்க நிபுணர்கள் மீட்டது எப்படி? - வெளியான முழு விவரம்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      இந்தியா
Uttarakhand 2023-11-28

Source: provided

டேராடூன் : உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை மீட்க உதவிய 'எலி வளை' சுரங்க நிபுணர்கள் நாடு முழுவதும் ஹீரோவாக கொண்டாடப்படுகின்றனர்.

உத்தரகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. முதற்கட்டமாக ஜேபிசி இயந்திரம் மூலம் மணல் குவியலை அகற்றும் முயற்சி தோல்வி அடைந்தது.

இரண்டாம் கட்டமாக சில்க்யாரா முனையில் இருந்து மணல் குவியலின் பக்கவாட்டில் ராட்சத இயந்திரங்கள் மூலம் துளையிடப்பட்டன. ஆனால் சுமார் 5-க்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்கள் தோல்வியடைந்த நிலையில் அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் மட்டும் தொடர்ந்து துளையிட்டு முன்னேறியது. ஆனால் 47 மீட்டர் துளையிட்ட நிலையில் அந்த இயந்திரமும் உடைந்தது.

இந்த சூழலில் டில்லியில் இருந்து 24 'எலி வளை' சுரங்க நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அமெரிக்க இயந்திரம் 47 மீட்டர் துளையிட்ட நிலையில் மீதமுள்ள 13 மீட்டர் தொலைவை கை வேலைப்பாடாக துளையிட 'எலி வளை' தொழிலாளர்கள் கடந்த திங்கள்கிழமை இரவு களமிறங்கினர். அசுர வேகத்தில் இயங்கிய அவர்கள் 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவில் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர். இதன் மூலம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து 'எலி வளை' சுரங்க நிபுணர் ராகேஷ் ராஜ்புட் கூறியதாவது: பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்வோம். எனவே கடந்த திங்கள்கிழமை இரவு பணியை துவங்கியதில் எங்களுக்கு எவ்வித சிரமமும் இல்லை. எங்களது குழுவில் டிரில்லிங், கட்டர்ஸ், வெல்டர்ஸ் என அனைத்து வகையான தொழிலாளர்களும் உள்ளனர்.

சில்க்யாரா சுரங்கப் பாதையில் 800 மி.மி. விட்டம் கொண்ட குழாயில் நுழைந்து சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டோம். இதை விட குறுகலான குழாய்களில் நுழைந்து கூட பணி செய்திருக்கிறோம். சில்க்யாரா சுரங்கப் பாதையில் ஒருவர் தோண்ட, மற்றொருவர் மணல் குவியலை அள்ளினார். 3-வது நபர் சிறப்பு டிராலியில் மணலை நிரப்பினார்.

இந்த சிறப்பு டிராலியை நாங்களே உருவாக்கி பயன்படுத்தி வருகிறோம். இதில் 2.5 குவிண்டால் எடையுள்ள பொருட்களை நிரப்ப முடியும். 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் 13 மீட்டர் தொலைவுக்கு சுரங்கத்தை தோண்டுவோம் என்று அதிகாரிகளிடம் வாக்குறுதி அளித்திருந்தோம். அதைவிட குறைவான நேரத்தில் சுரங்கத்தை தோண்டி குழாய்களை பொருத்திவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் 25 டன் ஆகர் இயந்திரம், ராட்சத துளையிடும் இயந்திரங்கள் செய்ய முடியாத சவால் நிறைந்த பணியை, மிக எளிதாக செய்து முடித்த 'எலி வளை' சுரங்க நிபுணர்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் ஹீரோவாக கொண்டாடப்படுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து