முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலை உயரவில்லை மத்திய அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி:பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலை நிலையாக இருப்பதாக  மத்திய உணவுத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.  

கடந்த ஓராண்டில் இந்தியாவில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்தது.  இதனால், சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டனர்.  இதனிடையே,  மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் குறைந்த விலை அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  இதன்படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ‘பாரத் அரிசி’ விற்பனை பிப்.9-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில் அடுத்த 4 முதல் 5 மாதங்களில் 15 லட்சம் டன் அரிசி மற்றும் 15 லட்சம் டன் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும் என மத்திய உணவுத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலைகள் நிலையாக உள்ளன. தற்போது பாரத் அரிசியின் விற்பனை சற்று குறைவாக உள்ளது.  ஆனால் வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும்.  தொடர்ந்து,  அடுத்த 4 முதல் 5 மாதங்களில் 15 லட்சம் டன் அரிசி மற்றும் 15 லட்சம் டன் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதுவரை 3.5 லட்சம் டன் கோதுமை மாவும்,  20 ஆயிரம் டன் அரிசியும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீதம் உயர்ந்து வரும் அரிசியின் விலை, பாரத் அரிசியின் சில்லறை விற்பனை மற்றும் மார்ச் முதல் ரபி பயிர் வருகையால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது, அரிசியைத் தவிர, கோதுமை மாவு, கோதுமை மற்றும் சர்க்கரை மற்றும் நிலையாக உள்ளன.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து