முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      விளையாட்டு
26-Ram-58-1

Source: provided

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரானது ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளதாக மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தவிர்த்து, இந்த தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. இது தொடர்பாக டிசிசிஐ செயலர் ரவி சௌகான் கூறியதாவது: 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கலந்துகொள்ளவுள்ளது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமையான தருணம். கொழும்புவில் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடர் நமது வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு என்பதையும் உணர்த்துகிறது என்றார்.

கள நடுவர் மாபெரும் சாதனை 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இந்த போட்டியில் கள நடுவராக ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆண்டி பைகிராப்ட் பணியாற்றி வருகிறார். இது நடுவராக இவரது 100-வது போட்டியாக அமைந்துள்ளது. இதன் மூலம் ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றிய 4-வது நபர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் வருமாறு., 1. ரஞ்சன் மதுகல்லே - 225 போட்டிகள், 2. ஜெப் குரோவ் - 125, போட்டிகள், 3. கிறிஸ் பிராட் - 123 போட்டிகள், 4. ஆண்டி பைகிராப்ட் - 100 போட்டிகள்

ஸ்மித் புதிய மைல்கல்

இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டெஸ்ட் போட்டிகளில் தனது 42-வது அரைசதத்தை ஸ்டீவ் ஸ்மித் பூர்த்தி செய்தார். இதன் மூலம், தனித்துவமான புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட முறை டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் கடந்த ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்துள்ளார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 10-வது முறையாக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக கிரேக் சேப்பல் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 முறை அரைசதம் எடுத்துள்ளார். டான் பிராட்மேன் 11 போட்டிகளில் விளையாடி 12 அரைசதமும், ரிக்கி பாண்டிங் 15 போட்டிகளில் விளையாடி 11 அரைசதமும் எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து