முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கான்ஸ்டாஸ் மீது மோதிய விவகாரம்: விராட் கோலிக்கு அபராதம்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      விளையாட்டு
26-Ram-51

Source: provided

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வீரர் கான்ஸ்டாஸ் மீது மோதிய விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. 

சுற்றுப்பயணம்... 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

பும்ராவின் ஓவரில்.... 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் பவுண்டரிகளை விளாசினார். அப்போது கான்ஸ்டாசுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

20 சதவீத அபராதம்....

ஓவர்களுக்கு இடையே கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். இந்நிலையில், கான்ஸ்டாஸ் மீது வேண்டுமென்றே மோதிய விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்களை கண்டிக்கும் வகையில் டிமெரிட் புள்ளி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து