முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலை. மாணவி தொடர்பான எப்.ஐ.ஆர்.-ஐ பகிர்ந்தால் நடவடிக்கை: தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      தமிழகம்
polies

சென்னை, பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பான எப்.ஐ.ஆர்.-ஐ பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகார் அடிப்படையில் பதிவு செய்த  முதல் தகவல் அறிக்கை நேற்று காலை வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான முதல் தகவல் அறிக்கை விவரங்களை காவல்துறை முடக்கி உள்ளது. மேலும் வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர்-ஐ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒளிபரப்பப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து