முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைகள் மோசமாக இருந்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

வியாழக்கிழமை, 27 ஜூன் 2024      இந்தியா
Nitin-Gadkari

புதுடெல்லி, சாலை மோசமாக வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இப்போது அவை பாஸ்ட் டேக் தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது. சாலைகளை பராமரிக்கவே இந்த சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரம் பல இடங்களில் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாத போதிலும் சுங்கக்கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கூறுகையில், "மத்திய அரசு நடப்பு ஆண்டு முதல் சாட்டிலைட் மூலம் இயங்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டிலேயே சுமார் 5,000 கி.மீட்டருக்கு மேல் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், மக்கள் தரமான சாலையில் பயனாகவே சுங்க கட்டணத்தை செலுத்துகிறார்கள். சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும் தான் சுங்கக்கட்டணம் வசூல் செய்ய வேண்டும். சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், மோசமாகவும் இருக்கும் இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. குண்டும், குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 6 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து