முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்ணை சாப்பிட்ட ரோகித்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      விளையாட்டு
INDIA-3 2024-06-30

Source: provided

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிகளில் தோல்வியை தழுவியிருந்தது. இதனால் உணர்ச்சி வசப்பட்ட ரோகித், இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் பார்படாஸ் மைதானத்தின் மண்னை சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

_____________________________________________________________________

வெற்றி குறித்து டோனி 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோனி வெளியிட்டுள்ள நெகிழ்ச்சி பதிவில், 2024ம் ஆண்டின் உலகக்கோப்பை சாம்பியன்கள். எனது இதயத்துடிப்பு அதிகரித்தது. 

ஆனாலும், இக்கட்டான சூழ்நிலையில் அமைதியாக இருந்து தன்னம்பிக்கையுடன் நீங்கள் செய்ததை செய்வது மிகவும் சிறப்பானது. நாட்டில் உள்ள இந்தியர்களுக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியர்கள் சார்பாகவும் உலகக்கோப்பையை நாட்டிற்கு மீண்டும் கொண்டுவந்ததற்கு வாழ்த்துகள். எனது பிறந்தநாள் பரிசாக விலைமதிப்பற்ற பரிசு அளித்ததற்கு நன்றி இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

_____________________________________________________________________

விராட் கோலி சாதனை 

சர்வதேச ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் பல அசைக்கமுடியாத சாதனைகளை படைத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உலகக் கோப்பையை வென்ற பிறகு, அதனை முத்தமிடுவது போலவும், அணியின் குழுப் புகைப்படங்களயும் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு 1 கோடியே 64 லட்சத்துக்கும் அதிமான லைக்குகள் பதிவாகியுள்ளன. விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 26 கோடிக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர்.

மேலும், அந்தப் பதிவில், “இதைவிட சிறந்த நாளைக் கனவில்கூட கண்டிருக்க முடியாது. கடவுள் மிகப் பெரியவர், நன்றியுடன் தலை வணங்குகிறேன். இறுதியாக நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம். ஜெய்ஹிந்த்..!” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்பட்ட பதிவு, வேகமான 10 லட்சம் லைக்குகள், அதிவேக 50 லட்சம் லைக்குகள், ஆசியாவிலேயே அதிவேக 50 லட்சம் லைக்குகள், ஆசியாவில் அதிகம் பின்தொடர்பவர்கள் போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன்னதாக நடிகை கியாரா அத்வானியின் திருமணப் பதிவுக்கு 1 கோடியே 62 லட்சம் லைக்குகள் வந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து