முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், கிக் இல்லாததால் கள்ளச்சாராயம் குடிக்கப்படுவதாக  அமைச்சரே தெரிவித்திருப்பது, கள்ளச்சாராய வியாபாரம் தமிழகத்தில் அமோகமாக கொடிகட்டி பறக்க வழிவகுக்கும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக  முதல்வரை  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து