முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் சர்ச்சைகளை அடுத்து நடவடிக்கை: நீட் தேர்வை கணினி முறையில் நடத்த மத்திய அரசு பரிசீலனை

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

டெல்லி  : மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இந்த ஆண்டு ஏற்பட்டன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என அடுத்தடுத்த சர்ச்சை வெடித்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. இத்தகைய சூழலில், நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு சேர நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வுக்கு தமிழகம் துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்தது. அதேபோல கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், கருணை மதிப்பெண்ணை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.

இதையடுத்து மறு தேர்வு நடத்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல் வினாத் தாள் விற்பனை, தேர்வை பார்த்து எழுத லஞ்சம் உள்ளிட்ட புகார்களும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. இதனால், தேசிய தேர்வு முகமைக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நீட் சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஐயும் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தொடர் சர்ச்சைகளுக்கு இடையே முதுகலை நீட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை சீரமைக்க மத்திய அரசு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நீட் தேர்வை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நீட் தேர்வு ஒ.எம்.ஆர் ஷீட் மூலம் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் பேனா மூலமாக விடைகளை குறிப்பிட வேண்டும். ஏற்கனவே ஜேஇஇ மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு ஆகிய தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனையின் போது, நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து