முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஜூசி சிக்கன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

ஜூசி சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் துண்டுகள் - 200 கிராம்.(நெஞ்சு கறி)
  2. மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்.
  3. மிளகுதூள் - ஒரு ஸ்பூன்.
  4. கார்ன் பிளவர் மாவு  - 100 கிராம்.
  5. பட்டர் - 2 ஸ்பூன்.
  6. பொடியாக நறுக்கிய பூண்டு - 4 பல். 
  7. தேன் - 100 கிராம்.
  8. சோயா சாஸ் - 2 ஸ்பூன்,
  9. வினிகர் - 2 ஸ்பூன்.
  10. சில்லி பிளக்ஸ் – சிறிதளவு.
  11. உப்பு - சிறிதளவு.
Method: 

செய்முறை ;--

  1. 200 சிக்கனை எடுத்து அதன் மேல் லேசாக நறுக்கி சதுரமாக வரும்படி கீறி வைத்துக்கொள்ளவும்.
  2. நறுக்கி வைத்துள்ள சிக்கனை ஒரு தட்டில் எடுத்து அதன் மேல்  சிறிதளவு உப்பை தூவிக்கொள்ளவும்.
  3. இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் தூவி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு தட்டில் 100 கிராம் கார்ன் பிளவர் மாவை எடுத்துக்கொள்ளவும்.
  5. மிளகுத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் தூவி  வைத்துள்ள சிக்கன் துண்டினை எடுத்து கார்ன் பிளவர் மாவில் போட்டு பிரட்டி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் பட்டர் போடவும்,பட்டர் உருகியதும்,கார்ன் பிளவர் மாவில் போட்டு பிரட்டி எடுத்த சிக்கனை  போட்டு வேக விடவும். 
  7. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்.
  8. இதனுடன் பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு மற்றும் 100 கிராம் தேன் ஊற்றி நன்றாக வேக விடவும்.
  9. இதனுடன் 2 ஸ்பூன் சோயா சாஸ், 2 ஸ்பூன் வினிகர் மற்றும் ஒரு ஸ்பூன் பட்டர் போட்டு நன்றாக வேக விடவும்.
  10. இதனுடன்  சிறிதளவு சில்லி பிளக்ஸ் போட்டு வேக விடவும்.
  11. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான ஜூசி சிக்கன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago