முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி.க்கு மாற்றாக இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் : நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      இந்தியா
Cort 2023 04 17

Source: provided

டெல்லி : மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1-ம் தேதி) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனையடுத்து 150 ஆண்டுகளாக நீதி மற்றும் காவல்துறையில் நடைமுறையில் இருக்கும் ஐ.பி.சி, சி.ஆர்.பி.சி. சட்டங்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு புதிய சட்டங்கள் அமலாகின்றன. 

நீக்கப்பட்டு...

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 1. இந்திய தண்டனைச் சட்டத்துக்கு (Indian Penal Code IPC- ஐபிசி) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, 2023, 2. குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்குப் ( Criminal Procedure Code- CRPC சிஆர்பிசி) பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 3. இந்திய ஆதாரச் சட்டம், 1872-க்கு மாற்றாக (Indian Evidence Act, 1872- ஆதார சட்டம்) பாரதிய சாக்ஷய சட்டங்கள் இருக்கும்.

531 பிரிவுகள்...

484 பிரிவுகளைக் கொண்ட சிஆர்பிசிக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா இப்போது 531 பிரிவுகளைக் கொண்டிருக்கும். 177 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன, 14 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிசிக்கு மாற்றான பாரதிய நியாய சன்ஹிதாவில் முந்தைய 511 பிரிவுகளுக்கு பதிலாக இப்போது 358 பிரிவுகள் இருக்கும். அதில் 21 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, 41 குற்றங்களில் சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது, 82 குற்றங்களில் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

19 பிரிவுகள் ரத்து...

25 குற்றங்களில் கட்டாய குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 6 குற்றங்களில் தண்டனையாக சமூக சேவை விதிகள் உள்ளன, 19 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பாரதிய நியாய சன்ஹிதாவில் பலாத்காரம், கூட்டு பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான குற்றம், கொலை, கடத்தல் மற்றும் கடத்தல் போன்ற மனித மற்றும் உடல் தொடர்பான குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது ஆதாரச் சட்டத்திற்கு மாற்றாக வரும் பாரதிய சாக்ஷயாவில் முந்தைய 167 பிரிவுகளுக்குப் பதிலாக இப்போது 170 பிரிவுகள் இருக்கும், 24 பிரிவுகள் திருத்தப்பட்டுள்ளன, 2 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன, 6 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முக்கிய அம்சங்கள்:

இனி காவல் நிலையத்துக்கு சென்றுதான் புகார் தர வேண்டும் என்பது இல்லை. மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவே புகார் தர முடியும். எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கால அவகாசம் 90 நாட்கள். விசாரணையை முடிக்க வேண்டிய நாட்கள் 180. விசாரணை முடிவடைந்த 30 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

அமித்ஷா விளக்கம்...

புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 1860 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் நோக்கம் நீதி வழங்குவது அல்ல, தண்டனை வழங்குவதாகும். இந்த மூன்று புதிய சட்டமூலங்கள் ஊடாக மக்களின் நீதிக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்றும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளன. திமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளின் சுமையைக் குறைக்கும் வகையில் நியாயமான, காலவரையறைக்குட்பட்ட, ஆதார அடிப்படையிலான விரைவான விசாரணைகள் அமலாக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளன. விசாரணையில் தடய அறிவியல் அடிப்படையில் வழக்கு விசாரணையை வலுப்படுத்தியுள்ளோம். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை ஆடியோ-வீடியோ முறையில் பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளோம். 

நாடு முழுவதும்... 

இனி , காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் அசாம் வரையிலும் நாடு முழுவதும் ஒரே நீதி முறை இருக்கும். தேசத் துரோக பிரிவுக்குப் பதிலாக தேசத்திற்கு எதிரான சதி என மாற்றியுள்ளோம். இந்த நாட்டிற்கு எதிராக யாரும் பேச முடியாது, அதன் நலன்களுக்கு யாரும் தீங்கு விளைவிக்க முடியாது. தேசத்துரோகம் என்றால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இந்த சட்டங்களில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 18 வயதிற்குட்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், மரண தண்டனையும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார வழக்குகளில், 20 ஆண்டுகள் அல்லது சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து