முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: டி.வி. நிகழ்ச்சியில் ஜோபைடன், டிரம்ப் நேருக்கு நேர் விவாதம்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      உலகம்
Joe-Biden-Trump 2024-06-28

Source: provided

 வாஷிங்டன் : அமெரிக்க  அதிபர் தேர்தலையொட்டி சி.என்.என். செய்தி நிறுவனம் சார்பில் நடந்த நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில்   ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் பங்கேற்று பரஸ்பர குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.  

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதே போல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர்  டிரம்ப் களமிறங்கியுள்ளார். 

இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாத நிகழ்ச்சிகளின் போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள். 

குறிப்பாக, வெளியுறவு கொள்கைகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள். அந்த வகையில் சி.என்.என். செய்தி நிறுவனம் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் நேற்று நடைபெற்றது. 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த விவாதத்தில் டிரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவாத நிகழ்ச்சி சி.என்.என். டி.வி.யில்  நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

இந்நிலையில், விவாதத்தின் முடிவில் யார் வெற்றிபெற்றார் என்று விவாதத்தை டி.வி.யில் பார்த்தவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்க வாக்காளர்கள் 565 பேரிடம் மெசேஜ் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 67 சதவிகிதம் பேர் விவாதத்தில்  டிரம்ப் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். 

அதேவேளை, 33 சதவிகிதம் பேர் மட்டுமே விவாதத்தில் பைடன் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். விவாதம் நடைபெறுவதற்குமுன் நடத்தப்பட்ட ஆய்வில், டிரம்பிற்கு 55 சதவிகித ஆதரவும், பைடனுக்கு 45 சதவிகித ஆதரவும் இருந்தது. 

ஆனால், விவாதத்திற்கு பின் டிரம்பிற்கான ஆதரவு 67 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும், வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 57 சதவிகிதம் பேர் நாட்டை வழிநடத்தும் விவகாரத்தில் பைடன் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளனர். 

நாட்டை வழிநடத்துவதில் டிரம்ப் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக 36 சதவிகிதம்பேர் தெரிவித்துள்ளனர். ஆனால், 14 சதவிகிதம்பேர் மட்டுமே பைடன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 6 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து