முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் விறுவிறுப்பாக நடந்த அதிபர் தேர்தல் : ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      உலகம்
Iran 2024-06-28

Source: provided

டெக்ரான் : ஈரானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதில் மக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர். 

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கடந்த மாதம் 19-ம் தேதி  ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து  புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 

ஈரான் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். ஈரான் அதிபர் பதவிக்கான இறுதி வேட்பாளர் பட்டியலில் முகமது பாகர் கலிபாப், சயீத் ஜலிலி, மசூத் பெஜெஷ்கியான், முஸ்தபா பூர்மொஹம்மதி, அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி ஆகியோர் இருந்தனர். 

ஆனால் கடைசி நேரத்தில் அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி ஆகியோர் போட்டியில் இருந்து விலகினர். இதனால் 4 பேருக்கிடையே போட்டி நிலவுகிறது. டெக்ரானில் உள்ள வாக்குச்சாவடியில்  ஈரான் தலைவர் அயதுல்லா தனது வாக்கை செலுத்தினார். 

கடந்த நான்கு ஆண்டுகளாக வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. இந்த முறை மக்கள் அதிக அளவில் ஓட்டு போட வேண்டும் என தலைவர் அயதுல்லா கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. எனவே, வாக்கு எண்ணும் பணி முடிவடைய இரண்டு நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் வெற்றியாளர் குறித்த முன்னிலை நிலவரம் வெளியாகி விடும். எந்த வேட்பாளரும் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகளை பெறவில்லை என்றால், அதிக வாக்குகள் பெறும் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய  முதல் வெள்ளிக்கிழமையன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 6 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து