முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகாகோவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      உலகம்
Chicago-Train 2024-06-28

Source: provided

சிகாகோ : சிகாகோவில் எரிபொருள் எடுத்து சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின் சிகாகோவில் இருந்து புரொப்பேன் என்ற எரி பொருளை எடுத்து கொண்டு சரக்கு ரயில் ஒன்று நேற்று முன்தினம் காலை புறப்பட்டு சென்றது. அந்த ரயிலானது சிகாகோவில் இருந்து தெற்கே 56 கி.மீ தொலைவில் உள்ள மேட்சன் கிராமத்திற்கு அருகே சென்ற போது ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தானது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே நடைபெற்றதால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெட்டிகளில் ஏதேனும் கசிவுகள் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்தனர். 

அப்போது, சிறிய கசிவு இருந்தது தெரியவந்தது. ஆனால் அது அபாயகரமான அளவீடுகளில் இல்லை என்பதால் மக்கள் வெளியேற்ற உத்தரவு விலக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் இருந்து தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

 இந்த விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சரக்கு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 days 6 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து