முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
School-Education 2022 02 11

சென்னை, தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தற்போது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தோ்வு வரும் மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப். 9 ஆம் தேதி முதல் ஏப். 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 8 ஆம் தேதி முதல் ஏப். 24 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 21 ஆம் தேதியில் இருந்தும் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து