முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்திற்கு காவிரியில் வரும் நீரின் அளவு 45,651 கனஅடியாக அதிகரிப்பு : மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்தது

புதன்கிழமை, 17 ஜூலை 2024      தமிழகம்
Cauvery 2023 06 07

Source: provided

மேட்டூர் : கர்நாடக மாநில காவிரி  நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, தமிழகத்திற்கு காவிரியில் வரும் நீரின் அளவு வினாடிக்கு 46,651 கனஅடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது.

2 வாரங்களாக...

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை கர்நாடக அரசு அதிகரித்துள்ளது. மொத்தம் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தற்போது 110.60 அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 36,675 கன அடியாக உள்ள நிலையில், அந்த அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 651 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் கபினி அணை நிரம்பியதால் அங்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை...

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 45,651 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரிப்பு காரணமாக மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2.97 அடி உயர்ந்தது....

செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,054 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து மாலையில் வினாடிக்கு 16,577 கன அடியாக கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலை நீர்வரத்து வினாடிக்கு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை 43.83 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 46.80 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.97 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது அணையின் நீர் இருப்பு 15.85 டிஎம்சியாக உள்ளது.

பரிசல் போக்குவரத்து...

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 2-வது நாளாக அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீரின் இழுவை விசை அதிகமாக இருப்பதால் 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. காவிரிக் கரைகளில் விட்டு விட்டு மழை பெய்வதால் மீனவர்கள் தங்கள் முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து