முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி கடைசி லீக் ஆட்டம்: இந்தியா-பாக். இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      விளையாட்டு
Hockey 2024-09-13

Source: provided

ஹூலுன்பியர் : இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.

அரைஇறுதிக்கு... 

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். நடப்பு சாம்பியன் இந்தியா தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

கடைசி ஆட்டம்...

சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இப்போட்டி மதியம் 1.15 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தான் 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது.

அரையிறுத்திக்கு...

லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும், 3வது ஆட்டத்தில் மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. இந்நிலையில், இந்திய அணி 4-வது ஆட்டத்தில் கொரியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன், அரையிறுதிக்கும் முன்னேறியது இந்திய அணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து