முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      விளையாட்டு
INDIA 2024-09-13

Source: provided

சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் 19-ம் தேதி...

இந்திய அணி அதன் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

சேப்பாக்கத்தில்... 

முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்கான பயிற்சியை இந்திய அணி தொடங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்பட வீரர்கள் பலரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் முறையாக... 

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா நீண்ட நேரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, முதல் முறையாக இந்திய மண்ணில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதன் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் இந்திய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வெற்றிப் பாதைக்கு... 

தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மட்டுமின்றி, பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் மற்றும் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோரும் இந்த தொடர்களை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்விக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்போடு உள்ளனர்.

உற்சாகத்தோடு... 

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது வங்கதேசம். பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்தோடு வங்கதேச அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.

முதல் 2 இடங்கள்.... 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்திய அணி 68.52 சதவிகித வெற்றிகளையும், ஆஸ்திரேலியா 62.50 சதவிகித வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம், வங்கதேசம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 45.83 சதவிகித வெற்றிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

துணை பயிற்சியாளர்களும்...

வலை பயிற்சியின் போது இந்திய அணியுடன் புதிய பந்து வீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான அபிஷேக் நாயரும் இணைந்துள்ளார். இருவரும் முதல் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து