முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலதிபர் மன்னிப்பு கேட்ட விவகாரம்: மன்னிப்புக் கோரிய அண்ணாமலை

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
Annamalai 2024-01-16

சென்னை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அன்னபூர்ணா ஹோட்டலின் உரிமையாளரும் பேசிக் கொண்ட தனிப்பட்ட உரையாடலை தமிழக பாரதிய ஜனதாவினர் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கோவையில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் வீடியோ தற்போது அகில இந்திய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. கோவையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய வீடியோ கடந்த இரு நாள்களாக டிரெண்ட் ஆனது.

அந்த வீடியோவையும் பாரதிய ஜனதா தரப்பிலிருந்து வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவுடன் இணைந்தே கேள்வி கேட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்ததாக, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“மதிப்பிற்குரிய நிதியமைச்சருக்கும் தொழிலதிபருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் வீடியோவை பகிர்ந்ததற்காக தமிழக பா.ஜ.க.வினர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் மதிப்பிற்குரிய சீனிவாசனை தொடர்பு கொண்டு, எதிர்பாராத விதமாக நடந்த தனியுரிமை மீறலுக்காக வருத்தம் தெரிவித்தேன்.

சகோதரர் அன்னபூர்ணா சீனிவாசன், தமிழக வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்குமாறு அனைவருக்கும் கோரிக்கை வைக்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, நிர்மலா சீதாராமன் மற்றும் சீனிவாசன் இடையேயான உரையாடலை சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து பா.ஜ.க.வினர் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து