முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் தமிழகத்திற்கான ஆகஸ்ட் மாத நீர் திறப்பு வரும் 30-ம் தேதி முடிவு : மேலாண்மை ஆணையம் தகவல்

புதன்கிழமை, 24 ஜூலை 2024      இந்தியா
Cauvery 2023 08 11

Source: provided

புதுடெல்லி : காவிரியில் தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை திறப்பது குறித்து வரும் 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் நேற்று (24.07.2024) பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில்  தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதனையடுத்து, தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில் அவர், “சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஆகஸ்ட் மாதத்துக்கான 45 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவித்தார். முன்னதாக ஆகஸ்ட் மாதத்துக்கான தண்ணீர் திறப்பது குறித்து ஜூலை 30ல் காவிரி ஒழுங்காற்றுக் குழு மீண்டும் கூடும் என ஆணையம் அறிவித்தது. அதன்படி, 45 டிஎம்சி நீர் திறப்பது குறித்து ஜூலை 30ல் முடிவெடுக்கப்படும் என்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து