முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேச கேப்டன் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      விளையாட்டு
Bangladesh 2024-09-02

Source: provided

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாக நஜ்முல் சாண்டோ கூறியுள்ளார். எனவே புதிய திட்டத்துடன் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் இந்தியா உட்பட எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"அந்தத் தொடரில் (பாகிஸ்தான் தொடர்) கிடைத்த வெற்றியால் எங்களுடைய ஒவ்வொரு வீரர்களும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளனர். அந்த வெற்றியால் எங்கள் அணியின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடர் கண்டிப்பாக சவாலானதாக இருக்கும். எனவே நாங்கள் புதிய திட்டத்துடன் வருவது அவசியம். அங்கே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் எங்களால் நல்ல முடிவுகளை சாதிக்க முடியும். ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறுவதற்காகவே விளையாட வேண்டும் என்ற அணுகு முறையை நாங்கள் கையாள்கிறோம். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டை பாகிஸ்தான் தொடரை வென்று நாங்கள் கொடுத்துள்ளோம். எனவே இப்படியே தொடர்ந்து விளையாடினால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல் முறையில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

___________________________________________________________________________

இந்திய அணியில் இல்லை: சேவாக்

ஐபிஎல் போன்ற டி20 தொடர்களும் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாததுமே இதற்கு காரணம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "இங்கே அதிகமான வெள்ளைப்பந்து போட்டிகள் நடைபெறுவதும் குறைவான ஸ்பின்னர்கள் வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்திய வீரர்கள் குறைவான உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது மற்றொரு காரணமாகும். 

சர்வதேசத்தை விட உள்ளூரில் நீங்கள் அதிக ஸ்பின்னர்களை எதிர்கொள்வீர்கள். எங்கள் காலத்தில் டிராவிட், சச்சின், கங்குலி,லட்சுமன், யுவராஜ் போன்ற அனைவரும் நிறைய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவோம். அதனால் நாங்கள் ஸ்பின்னர்களை அதிகமாக எதிர்கொண்டு விளையாடுவோம். ஆனால் அட்டவணை பிசியாக இருப்பதால் வீரர்களுக்கு குறைந்த நேரமே கிடைக்கிறது. நிறைய லீக் தொடர்கள் நடைபெறுவதால் ஸ்பின்னர்கள் தங்களுடைய திறனை முன்னேற்றுவதில்லை" என்று கூறினார்.

___________________________________________________________________________

ஆஸ்திரேலிய வீரர் சவால்

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தியா சமீப காலங்களில் வேகப்பந்து வீச்சு துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே தெரிவித்துள்ளார். அதனாலயே தங்களுடைய சொந்த மண்ணில் கூட அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு., இந்த 2 அணிகள் ஒன்றாக விளையாடும்போது எப்போதுமே எனர்ஜி உச்சமாக இருக்கும். அந்த அணிகள் மோதும் போட்டிகள் இந்தியா, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து உட்பட எங்கு நடைபெற்றாலும் அதற்கு எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் நன்றாக இருக்கிறது. அதுவே அவர்களை ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் முன்னிலைப்படுத்துகிறது. அதனாலேயே ஆஸ்திரேலியாவில் அவர்களை வீழ்த்துவது கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த கோடைகாலத்தில் நாங்கள் அவர்களை உண்மையான அழுத்தத்தின் கீழ் தள்ளி வெல்வோம் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

___________________________________________________________________________

குறைத்து மதிப்பிடக்கூடாது: பண்ட்

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆசிய நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற அணிகள் ஆசியாவில் நன்றாக விளையாடும் அணிகள் ஆகும். ஏனென்றால், அவர்களுக்கு இங்குள்ள ஆடுகளங்களின் தன்மைகள், சூழ்நிலைகள் நன்கு பழக்கப்பட்டிருக்கும். இந்திய அணி அதன் திறமைகளை வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். எப்படி நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

எதிரணி யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் 100 சதவீதம் உழைப்பை கொடுத்து விளையாட வேண்டும். சர்வதேச தொடர்களில் அழுத்தம் என்பது எப்போதும் இருக்கும். எந்த ஒரு தொடரையும் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி, தோல்விக்கான இடைவெளி மிகவும் குறைந்து விட்டது. அனைத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 

___________________________________________________________________________

நியூசி., அணிக்கு பயறிச்சியாளர்

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்காக நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. 

இந்த தொடர் வரும் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த 2 டெஸ்ட் தொடர்களுக்கும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் ரங்கனா ஹெராத் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்தின் துணை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து