முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 24 ஜூலை 2024      இந்தியா
Senthil-Balaji 2023 03 27

Source: provided

புதுடெல்லி : செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் நடந்த நிலையில் இன்று வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்.

செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள் என்று தெரியவில்லை.

எப்போது விசாரித்து முடிவு எடுப்பார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வாதம் செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்பட்டது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால் வழக்கை வேறு தினம் மாற்றி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை புதன்கிழமை (24-07-2024) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் நடந்தது.

இந்த விசாரணையில் வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. பென்டிரைவ் கைப்பற்றப்பட்டத்தில் தனது பங்கு எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து , கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் உள்ளன என அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் . மேலும் உங்களிடம் பதில் இல்லை என்றால் இன்று பதிலோடு வாருங்கள் விசாரிக்கிறோம் என கூறிய நீதிபதிகள் வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து