முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் அணியில் இணைகிறார்: பந்துவீச்சு பயிற்சியில் முகமது ஷமி தீவிரம்

புதன்கிழமை, 24 ஜூலை 2024      விளையாட்டு
Mohammed-Shami 2024 07 24

Source: provided

மும்பை : பந்துவீச்சு பயிற்சியில் முகமது ஷமி தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் விரைவில் இந்திய அணியில் இணையவுள்ளார்.

காயம் காரணமாக... 

ஒருநாள் உலகக் கோப்பையில் குறைவான போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் முகமது ஷமி. ஒருநாள் போட்டிகளில் 195 விக்கெட்டுகளும், டெஸ்ட்டில் 229 விக்கெட்டுகளும், ஐபிஎல் போட்டிகளில் 127 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு முகமது ஷமி காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை. கணுக்கால் காயம் காரணமாக ஷமிக்கு லண்டனில் பிப்.27 அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பந்துவீச்சுப் பயிற்சி...

முகமது ஷமிக்கு பிரதமர் மோடி விரைவில் நலம்பெற வேண்டுமெனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முதல்முறையாக பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஷமி. பயிற்சி செய்யும் புகைப்படங்களைப் பதிவிட்டு, “கையில் பந்தும் மனதில் பேரார்வத்துடனும் போட்டியில் திரும்ப இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு... 

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலும் ஷமியினால் விளையாட முடியவில்லை. தற்போது இலங்கை தொடரில் பங்கேற்க முடியவில்லை. பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, “வங்கதேசத்துக்கு எதிராக செப்டம்பரில் தொடங்கவுள்ள தொடரில் முகமது ஷமி இந்திய அணியுடன் இணைய வாய்ப்புள்ளது” என முன்னமே இது குறித்து தகவல் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து