முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      இந்தியா
Karnataka-Assembly

பெங்களூர், கர்நாடக சட்டசபையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை  ஆண்டு தோறும் இந்த தேர்வை நடத்துகிறது. நீட் நுழைவுத் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து போவதால் நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட  சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  கர்நாடகாவிலும் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அண்மையில் மேற்கு வங்காள சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து