முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் கனமழை: மும்பைக்கு ரெட் அலர்ட் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      இந்தியா
Mumbai-2024-07-25

மும்பை, மராட்டிய மாநிலத்தில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை நகருக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. 

மராட்டிய மாநிலம் மும்பை, புனே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதாவது, ஒரே நேரத்தில் 200 மிமீ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். 

மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும், தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியதால் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. தொடர் மழையால் முத்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர் மழை காரணமாக தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புனேவில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே,  இந்திய வானிலை ஆய்வு மையம், மும்பை நகருக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து