முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய ஆண்கள், மகளிர் அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      விளையாட்டு
25-Ram-50

Source: provided

பாரிஸ்: பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கியுள்ளது. இதில் மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற பஜன் கவுர் 11, அங்கிதா பகத் 22 மற்றும் தீபிகா குமாரி 23-வது இடத்தை பிடித்தனர். புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக இந்திய மகளிர் அணி 4-ம் இடம் பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இதேபோல் ஆண்கள் அணியும் தகுதிப்பெற்றது.

72 முறை எய்தனர்....

மொத்தம் இரண்டு பாதிகளாக தனிநபர் ரேங்கிங் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளரும் 72 முறை அம்புகளை எய்தனர். ஒரு செட்டுக்கு ஆறு முறை அம்புகளை எய்தனர். ஆறு செட்களை கொண்டது ஒரு பாதி. இதில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் போட்டித் தரவரிசை எண் வழங்கப்பட்டது. அதன்படி மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத் 666 ஸ்கோருடன் 11-ம் இடம் பிடித்தார், பஜன் கவுர் 659 ஸ்கோருடன் 22-ம் இடம் பிடித்தார், தீபிகா குமாரி 658 ஸ்கோருடன் 23-ம் இடம் பிடித்தார்.

நாக்-அவுட் போட்டி... 

வில்வித்தையில் தனிநபர் ஆட்டம் ரவுண்ட் ஆஃப் 64/32 சுற்று வரும் 30-ம் தேதி முதல் தொடங்குகிறது. அதேபோல மகளிர் அணிக்கான நாக்-அவுட் போட்டி 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். 5 முதல் 12 வரையிலான இடங்களை பிடிக்கும் அணிகள் ரவுண்ட் ஆஃப் 16-ல் விளையாடும். அந்த வகையில் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்திய அணி மொத்தமாக பெற்ற 1983 புள்ளிகளுடன் நான்காம் இடம் பிடித்து, நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கொரியா, சீனா மற்றும் மெக்சிக்கோ ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை மகளிர் பிரிவில் பிடித்தன. 

உலக சாதனையாக... 

லிம் சி-ஹியோன்: மகளிர் தனிநபர் பிரிவில் கொரியாவின் லிம் சி-ஹியோன் 694 ஸ்கோருடன் முதல் இடத்தை பிடித்தார். இது உலக சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் 72 முறை அம்புகளை அம்புகளை எய்தும் ரேங்கிங் சுற்றில் கொரியாவின் அன் சான் 692 ஸ்கோர் எடுத்தது உலக சாதனையாக இருந்தது. தற்போது அதனை சி-ஹியோன் முறியடித்துள்ளார்.

ஆண்கள் அணியும்... 

இந்த நிலையில் ஆண்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்தியாவின் திராஜ் பொம்மாதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். திராஜ் பொம்மாதேவரா 681 புள்ளிகளும், தருண்தீப் ராய் 674 புள்ளிகளும், பிரவீன் ரமேஷ் ஜாதவ் 658 புள்ளிகளும் பெற்றனர். மொத்தமாக 2013 புள்ளிகள் பெற்று அணிகள் பிரிவில் 3-வது இடம் பிடித்தனர். இதனால் ஆண்கள் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். மீதமுள்ள 8 அணிகளில் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தென்கொரியா 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து