முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இந்திய அணி

புதன்கிழமை, 31 ஜூலை 2024      விளையாட்டு
India-1 2024 07 31

Source: provided

மும்பை : டி20 கிரிக்கெட்டில்  ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இந்திய அணி உள்ளது.

முழுமையாக...

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா ‘சூப்பா் ஓவா்’-இல் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரை 3-0 என முழுமையாக இந்தியா கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, இலங்கையும் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் சோ்த்ததால், ஆட்டம் ‘டை’ ஆனது.

சூப்பா் ஓவரில்... 

இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட சூப்பா் ஓவரில், முதலில் இலங்கை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 2 ரன்கள் சோ்க்க, இந்தியா ஒரே பந்தில் பவுண்டரியுடன் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக பெற்ற அதிக வெற்றிகள் (22 வெற்றிகள்) பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 23 வெற்றிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது.

அதிக வெற்றிகள்... 

மேலும் இந்திய அணி இலங்கைக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணியாகவும் சாதனை படைத்துள்ளது. 32 போட்டிகளில் சூப்பர் ஓவர் உள்பட இலங்கை அணியிடம் 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிக தோல்விகளை சந்தித்துள்ளது என்றால் அது இலங்கை அணிதான். இதுவரை 105 போட்டிகளில் (சூப்பர் ஓவர் போட்டிகள் உள்பட) தோல்வியுற்று மோசமான சாதனை படைத்துள்ளது. 104 தோல்விகளுடன் வங்கதேச அணி 2ஆம் இடத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

அதிக தோல்விகள் கண்ட அணிகள்:

1) இலங்கை - 105 தோல்வி.

2) வங்காளதேசம் - 104 தோல்வி.

3) வெஸ்ட் இண்டீஸ் - 101 தோல்வி.

4) ஜிம்பாப்வே - 99 தோல்வி.

5) நியூசிலாந்து - 99 தோல்வி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து