முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கலான் விமர்சனம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      சினிமா
Tangalan-Review 2024 08 19

Source: provided

18 ஆம் நூற்றாண்டில் தொடங்கும் கதைக்களத்தில் பூர்வகுடி மக்களின் நிலங்களை அபகரித்த அரசர்களிலிருந்து எஞ்சிய சிறிய சொந்த இடத்தில் விவசாயம் செய்து வருகிறார் பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான். 

பல நுற்றாண்டுகளுக்கு முன்பு யானைமலைப் பகுதியில் தங்கம் இருப்பதை கேள்விப்பட்ட சிற்றரசன் ஒருவன் பேராசையால் இவரின் மூதாதையரை தூண்டி அப்பகுதியில் தங்கத்தை பாதுகாக்கும் காவல் தேவதையாக விளங்கும் ஆராத்தி என்ற சூனியக்கார பெண்ணை தாக்கி சண்டையிட்டு தாக்குதலுக்கு உள்ளானதையும், பலர் கொல்லப்பட்டதையும், அந்த இடத்திற்கு செல்வது ஆபத்து என்று கதையாக தன் குழந்தைகளுக்கு சொல்கிறார். 

தங்கலானின் மூதாதையர் கண்ட தங்கத்தை கண்டுபிடித்து எடுத்து கொடுத்தால் அதில் பங்கு தருவதாகவும், அது வரை அவர்களுக்கு உணவு, ஊதியம் கொடுப்பதாகவும் கூற, தங்கலான் தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு அந்த ஆங்கிலேயர்களுடன் செல்கிறார். பல நாட்கள் கடந்த நிலையில் பல தடைகளை தாண்டி ஒரு இடத்தில் முகாமிட்டு தங்கலானுக்கு உடை, ஊதியம் கொடுத்து கிராமத்திற்கு சென்று அனைவரையும் அழைத்த வருவாறு ஆங்கிலேயர் கூறுகிறார். கிராமத்திற்கு வரும் தங்கலான் தன் நிலத்தை மீட்டு, தன்னுடன் வேலை செய்ய வருமாறும் ஈடாக தங்க பங்கு கிடைக்கும் என்றும் நிம்மதியாக வாழலாம் என்று கூறி கிராம மக்களுடன் தன் குடும்பத்தையும் அழைத்து வருகிறார். 

இறுதியில் தங்கலான் சந்திக்கும் கஷ்டங்கள் என்ன? தங்கம் கிடைத்ததா இல்லையா என்பதை தெளிவாக பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் அவருக்கே உண்டான பாணியில் சொல்லி இருக்கிறார். இயக்குனர் . மொத்தத்தில் இந்த தங்கலான் விக்ரம் நடிப்பில் மற்றும் ஒரு மயில் கல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து