முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய பிராந்தியத்தில் பாதுகாப்பான மண்டலத்தை அமைப்பதே குறிக்கோள் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      உலகம்
Jelensky 2024 08 19

Source: provided

கீவ் : ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் பாதுகாப்பான மண்டலத்தை அமைப்பதே குறிக்கோள் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இது வரை ரஷ்யா இந்த போரில் வெற்றி பெற முடியவில்லை. மேற்கத்திய நாடுகள் உதவிகளுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி திடீரென உக்ரைன் வீரர்கள் திடீரென ரஷ்யா எல்லையில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்து சுமார் 70 குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவித்தது. எல்லையில் இருந்து ரஷ்யா நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி. மற்ற நோக்கம் ஏதும் இல்லை என உக்ரைன் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், தற்போது ஒட்டுமொத்த தற்காப்பு நடவடிக்கைதான் எங்களது முதன்மையான பணியாகும். முடிந்தவரை ரஷ்ய போர் திறனை அழித்து அதிகபட்ச எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது. குர்ஸ்க் பிராந்தியத்தில் எங்கள் செயல்பாடு, ரஷ்யாவில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவது இதில் அடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து