முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்கார தேர் பவனியுடன் நியூயார்க்கில் இந்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டம் : பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்பு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      உலகம்
New-York 2024 08 19

Source: provided

நியூயார்க் : நியூயார்க்கில் அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பை நடத்தி வெளிநாடுவாழ் இந்தியர்கள் சுதந்திர தின விழா கொண்டாடினர். இந்நிகழ்வில் பிரபல பாலிவுட்  நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

 நியூயார்க் நகரில் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்திய சுதந்திர தின விழா பேரணி  நடைபெற்றது. இதில், 40-க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்று, நகரை வலம் வந்தன. குறிப்பாக, 19 அடி நீளம், 9 அடி அகலம், 9 அடி உயரம் கொண்ட அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிவமைப்பு கொண்ட வாகனமும் இடம்பெற்றிருந்தது.

இந்த ராமர் கோவில் போன்ற வடிவமைப்பு இந்தியாவில் உருவாக்கப்பட்டு, விமானம் மூலம் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாகும். இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா, பன்கஜ் திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர். மதப்பாடல்கள் ஒலிபரப்பட்டு, இசைக்கருவிகள் இசைக்க, மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து