முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த பள்ளி மாணவிகள்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      இந்தியா
Modi 2024 08 19

Source: provided

புது டெல்லி : ரக்சா பண்டிகையை  முன்னிட்டு நேற்று பிரதமர் மோடிக்கு பள்ளி குழந்தைகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர். 

ரக்சா பந்தன் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி,  பிரதமர்  மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் நேற்று   காலை டெல்லியிலுள்ள பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். 

அங்கு பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியைகளும் பிரதமருக்கு ஆர்வமுடன் ராக்கிக் கயிறு கட்டி மகிழ்ந்தனர். சில குழந்தைகள் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த ராக்கிக் கயிறுகளை கட்டினர். இதைக் கண்டு பிரதமர் மோடி நெகிழ்ந்தார். 

அப்போது, ஒரு குழந்தைப் பிரதமருக்கு முத்தமிட வரவே, குனிந்து மகிழ்ச்சியுடன் முத்தத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பின்னர், குழந்தைகளின் பெயர்களை தனித்தனியாக  பிரதமர் கேட்டு தெரிந்து கொண்டார். தொடர்ந்து, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுடன் சேர்ந்து பிரதமர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

இந்த படத்தை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதே போல, ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப் படையினருக்கு பள்ளிக் குழந்தைகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து