முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில மோசடி வழக்கில் முதல்வர் சித்தராமையா மீதான நடவடிக்கை நிறுத்திவைத்தது கர்நாடக ஐகோர்ட்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      இந்தியா
Siddaramaiah 2023 04 16

பெங்களூரு, கவர்னரின் அனுமதிக்கு எதிரான மனு விசாரணைக்கு வரும்வரை மூடா ஊழல் வழக்கில் சித்தராமையா மீதான நடவடிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் உள்ள விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட‌து. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அம்மாநில கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சித்தராமையா இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். தனது அரசியல் வாழ்கையில் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக ஒருபோதும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதில்லை எனவும், அமைச்சராக இருந்த போதும் இப்போது முதலமைச்சராக இருக்கும் போதும் தனிப்பட்ட தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கவர்னர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்திருந்த நிலையில், அதனை எதிர்த்தே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று (ஆக. 19) காலை அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னதாக சித்தராமையா தனது ட்விட்டரில் கவர்னரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் ட்வீட் செய்திருந்தார். மேலும், எந்தவொரு தவறும் செய்யாததால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் கவர்னர் விசாரணைக்கு அனுமதி அளித்ததற்கு எதிராகவும் காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தியது. இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. மேலும், கவர்னரின் அனுமதிக்கு எதிரான மனு விசாரணைக்கு வரும்வரை மூடா ஊழல் வழக்கில் சித்தராமையா மீதான நடவடிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து