முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்பு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM-2 2024 08 19

சென்னை, தமிழக அரசின் புதிய தலைமை  செயலாளராக முருகானந்தம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி தலைமைச் செயலாளராக பதவியேற்ற சிவ்தாஸ் மீனா ஓராண்டுக்கும் மேலாக அந்த பதவியில் இருந்தார்.  சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக தற்போது முதலமைச்சரின் தனி செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் 

சென்னையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான என்.முருகானந்தம் 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளர், தொழிற்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் தயாரிப்பில் நிதித்துறை செயலாளராக முருகானந்தம் முக்கிய பங்களிப்பை அளித்திருந்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சரின் முதன்மைச் செயலராக இருந்த உதயச்சந்திரன் நிதித் துறைச் செயலராக மாற்றப்பட்ட போது, நிதித்துறைச் செயலராக இருந்த என்.முருகானந்தம் முதலமைச்சரின் முதன்மை தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து