முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட் கம்மின்ஸ் புதிய திட்டம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Pat-Cummins 2024-04-10

Source: provided

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆல்ரவுண்டர்களான கேமரூன் மற்றும் மிட்செல் மார்ஷை அதிக அளவில் பயன்படுத்த ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டிருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர்கள் இருப்பது அணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. ஆனால், அணியில் உள்ள ஆல்ரவுண்டர்களை நாங்கள் நினைத்த அளவுக்கு இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடந்த இரண்டு கோடைகால டெஸ்ட் தொடர்களில் ஆல்ரவுண்டர்களை அதிகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், இந்த முறை நடைபெறவுள்ள கோடை கால டெஸ்ட் தொடர் சற்று வித்தியாசமாக இருக்கப் போகிறது.

ஆல்ரவுண்டர்களான கேமரூன் கிரீன் மற்றும் மிட்செல் மார்ஷை அதிக அளவில் பந்துவீச்சில் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். கேமரூன் கிரீன் ஷீல்டு கிரிக்கெட்டில் பந்துவீச்சாளராக அறிமுகமானார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக அளவில் பந்துவீசியதில்லை. இந்த முறை அவரை பந்துவீச்சில் அதிகம் பயன்படுத்திக் கொள்வோம். கேமரூன் கிரீன் மற்றும் மிட்செல் மார்ஷுடன் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு 6 பந்துவீச்சு தெரிவுகள் இருக்கும் என்றார்.

_______________________________________________________________________________

பாகிஸ்தான் அணியில் மாற்றம்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 21) தொடங்கவுள்ளது. இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஆமிர் ஜமால் உடல்தகுதி காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடிய அவருக்கு காயம் ஏற்பட்டது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக காயத்திலிருந்து குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உடல் தகுதி காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல் (துணைக் கேப்டன்), அப்துல்லா ஷஃபீக், பாபர் அசாம், குர்ரம் ஷாஷத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் ஆயூப், சல்மான் அலி அகா, சர்ஃபராஸ் அகமது மற்றும் ஷாகின் ஷா அப்ரிடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து