முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு வாழ்நாள் சேவையாற்றிய அதிபர் பைடனுக்கு நன்றி: கமலா ஹாரிஸ்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      உலகம்
Kamala 2024 08 03

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவுக்கு வாழ்நாள் சேவையாற்றியதற்காக, வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்காக பைடனுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.  ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த சூழலில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கியுள்ளது.  இதனை காண்பதற்காக அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். மாநாட்டில் பங்கேற்று பேசிய கமலா ஹாரிஸ்,

நம்முடைய நாட்டுக்கு வாழ்நாள் சேவையாற்றியதற்காக, வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்காக பைடனுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  நாட்டின் ஒவ்வொரு பகுதியை சேர்ந்தவர்களும் மற்றும் அனைத்து நிலையில் வாழும் மக்களும் இந்த மாநாட்டில் கூடியிருக்கின்றனர்.  

வருகிற நவம்பரில் நாம் மீண்டும் ஒன்று கூடி, நாம் முன்னேறி செல்கிறோம் என்று ஒரே குரலில் அறிவிப்போம். எப்போது நாம் போராடுகிறோமோ, அப்போது நாம் வெற்றி பெறுவோம் என்று எப்போதும் நாம் நினைவில் கொள்வோம். இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து