முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்ஸ்போர்டு பல்கலை. வேந்தர் பதவிக்கு இம்ரான்கான் விண்ணப்பம்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      உலகம்
Imran-Khan-3

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார். 

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார. சுமார் ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருக்கும் இம்ரான் கான், இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

இம்ரான் கான் தனது குழுவிற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு அளித்தார். விண்ணப்பத்தின் பரிசீலனை தற்போது நடைபெறுகிறது. இது ஒரு மரியாதைக்குரிய பதவியாகும். 

இம்ரான் கான் வேந்தராக தேர்வு செய்யப்பட்டால் அது சிறந்தது. அப்படி நடந்தால் முதல் ஆசிய நபர் ஆவார். இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல. ஆசியா மற்றும் உலகத்திற்கும் சிறந்த சாதனையாக கருதப்படும் என தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கான லண்டன் செய்தி தொட்பாளர் சயீத் ஜுல்பிகர் புகாரி தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கின் கடைசி பிரட்டிஷ் கவர்னரான கிறிஸ் பாட்டன் கடந்த பிப்ரவரி மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்த விலகினார். இதனால் வேந்தர் பதவி காலியாக உள்ளது.

10 வருட வேந்தர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விவரங்கள் அக்டோபர் மாதம் வரை வெளியிடப்படாது. அக்டோபர் மாதம் கடைசியில் வாக்கெடுப்பு நடைபெறும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தத்துவம், அரசியல், பொருளாதாரம் படிப்பு முடித்த இம்ரான் கான் 1975-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து